மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி

ஓசூர், மார்ச் 3:ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஓசூர் பிபிசி நடத்திய 7ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி இரவு, பகல் ஆட்டங்களாக 3 நாட்கள் நடைபெற்றது.

 மாநிலம் முழுவதிலும் இருந்து 27 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் மதுரை-சேலம் அணிகள் மோதின. இதில் மதுரை அணி வெற்றி பெற்று முதல் பரிசாக ₹50 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாவது பரிசு பெற்ற சேலம் அணிக்கு ₹30 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ₹20 ஆயிரமும், நான்காவது பரிசாக ₹10 ஆயிரமும் சிறப்பு ஆட்டக்காரருக்கு ₹5 ஆயிரமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓசூர் எம்எல்ஏ சத்யா கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், முன்னாள் நகரச்செயலாளர்கள் குருசாமி, அக்ரோ நாகராஜ், மாதேஷ்வரன்,உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மஞ்சுநாத் மற்றும் ரூபி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories:

>