டேக்வாண்டோ போட்டியில் தர்மபுரி மாணவருக்கு தங்கம்

தர்மபுரி, மார்ச் 3:  சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டி நேபாளத்தில் நடந்தது. இந்த போட்டியில் 68 கிலோ சீனியர் எடை பிரிவில், தர்மபுரியை சேர்ந்த கல்லூரி மாணவர் தீபன்சக்கரவர்த்தி கலந்து கொண்டு தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் பெற்று தர்மபுரிக்கு வந்த மாணவர் தீபன்சக்கரவர்த்தியை, மாவட்ட டேக்வாண்டோ பயிற்சியாளர் சுதாகர், இணை பயிற்சியாளர்கள் சிவகுமார், ராஜா, குங்குமகீதன், விஸ்வா, ராமமூர்த்தி, ராம்குமார், தமிழரசன், மாணவரின் பெற்றோர் கண்ணப்பன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories:

>