மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் உயிரிழப்பு

பென்னாகரம், மார்ச் 3: பென்னாகரம் அருகே மர்ம விலங்கு கடித்ததில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 11 ஆடுகள் உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெரும்பாலை ஆரல்குந்தி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (58).விவசாயி. இவர் 40க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு, மாலை பட்டியில் அடைத்துள்ளனர். நேற்று காலை ஆட்டு படிக்கு சென்று பார்த்த போது, மர்ம விலங்கு கடித்ததில், 11 ஆடுகள் உயிரிழந்த நிலையிலும், மூன்று ஆடுகள் காயமடைந்த நிலையிலும் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தன், இதுகுறித்து பெரும்பாலை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வன காப்பாளர் நிர்மல்குமார், வனவர் ராமமூர்த்தி, கால்நடை மருத்துவர் நந்தினி, ஆரல்குந்தி கிராம நிர்வாக அலுவலர் பிரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர்.பின்னர் ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து குழி தோண்டி புதைத்தனர்.இது குறித்து வனத்துறையினர் விசரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>