தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் அனைத்து கட்சியினர் கோரிக்கை விடு

திருச்சி, மார்ச் 3: தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் அனைத்து கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதில் திருச்சியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 96 வீரர்கள் உதவி கமிஷனர் தலைமையில் நேற்று முன்தினம் ரயில் மூலம் ஹைதராபாத்தில் இருந்து திருச்சி வந்தனர். இங்கு திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் தங்கி உள்ளனர். தொடர்ந்து நேற்று பொதுமக்களின் அச்சம் போக்கும் விதமாக மத்திய ஆயுதப்படை வீரர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு அணிவகுப்பு நடத்தினர். இவர்களுடன் திருச்சி மாநகர போலீசாரும் இணைந்து சென்றனர். தலைமை தபால் நிலையம் அருகே தொடங்கிய அணிவகுப்பை மாநகர துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம் துவக்கி வைத்தனர். அணிவகுப்பு ஒத்தக்கடை, எம்ஜிஆர் சிலை வழியே அரசு மருத்துவமனை சென்றடைந்தது. அதே போல் காந்தி மார்க்கெட்டில் துவங்கிய அணிவகுப்பு பிரபாத் ரவுண்டானா அருகே முடிந்தது. திருவெறும்பூர்: திருவெறும்பூர் பகுதிக்கு வந்த மத்திய எஸ்எஸ்பி பிரிவை சேர்ந்த 96 பேர் இன்ஸ்பெக்டர் ஜிடி சொங்கன்லோகம் தலைமையில் வந்த 96 வீரர்களும் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் நிலையத்துக்குட்பட்ட போலீசார் மற்றும் திருச்சி அதிவிரைவு படை போலீசார் என சுமார் 300 போலீசார் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பாலாஜி நகரில் இருந்து திருவெறும்பூர் வரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

Related Stories: