திருச்சி ஏர்போர்ட்டில் ஜெல் வடிவில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி, மார்ச் 3: திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து ஜெல் வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், மஸ்கட், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் மற்றும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.40 லட்சம் மதிப்பிலான 850 கிராம் தங்கத்தை ஜெல் வடிவில் உருக்கி அதனை உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>