திருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள், ேபாலீசார் அணிவகுப்பு நடந்துகூட செல்ல முடியாமல் மக்கள் அவதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 7ம் தேதி பூச்சொரிதல் விழா துவக்கம்

மண்ணச்சநல்லூர், மார்ச் 3: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் 7ம் தேதி பூச்சொரிதல் விழா தொடங்குகிறது. தமிழகத்தில் சக்தி வழிபாட்டு திருத்தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்பாளை வழிபட்டு செல்வர். இந்த கோயிலில் நடக்கும் பல்வேறு திருவிழாக்களில் முதன்மையானது பூச்சொரிதல் விழா. பூச்சொரிதல் விழா நடைபெறும் 28 நாட்கள் பக்தர்களின் நன்மைக்காக அம்பாள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். பச்சை பட்டினி விரதத்தின்போது அம்பாளுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு, இளநீர், பானகம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா வரும் 7ம் தேதி தொடங்குகிறது. அதிகாலையில் பல்வேறு பூஜை நிகழ்ச்சிகளுக்கு பிறகு காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீன லக்கினத்தில் காப்பு கட்டுதல் தொடங்கி பூச்சொரிதல் விழா தொடங்குகிறது. முதலில் கோயில் நிர்வாகம் சார்பாக தெற்கு ரத வீதியில் இருந்து யானை மீது வைத்து ஊர்வலமாக பூ கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நடைபயணமாக வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபடுகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் 2வது, 3வது, 4வது, 5வது பூச்சொரிதல் விழாக்கள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் அலுவலர்களும், பணியாளர்களும் செய்து வருகின்றனர்.

Related Stories:

>