×

நாகூர் தர்காவில் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா

 

கீழ்வேளூர், மே 19: நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) ஆண்டகை அவர்களின் கந்தூரி விழா ஆண்டு தோறும் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று முன்தினம் இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று முந்தினம் இரவு 9 மணிக்கு சின்ன ஆண்டவர் வாசல் முன்பு 3 நாட்களுக்கு மெளலூது ஷரீப் நடைபெறும். இன்று மாலை 5.10 மணிக்கு சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tags : Chinna Andavar Kanduri festival ,Nagore Dargah ,Kilvelur ,Andavar ,Dargah ,Nagore, Nagaland district ,Hazrat ,Syed Muhammad Yusuf Sahib ,R.A ,Andagar's Kanduri festival ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்