கே.சாத்தனூர் சார்பதிவாளர் பொறுப்பேற்பு

திருச்சி, மார்ச் 3: கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக கோகிலா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். திருச்சி கே.கே.நகர், கே.சாத்தனூர் பழனிநகர் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக பாஸ்கர் பணியாற்றி வந்தார். இவர் திருப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தா.பேட்டை சார்பதிவாளர் கோகிலா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக கோகிலா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Related Stories:

>