பழநியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

பழநி, மே 20: பழநியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பகத்சிங் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். 3 சக்கர மோட்டார் பைக்குகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர செயலாளர் தங்கவேல், பொருளாளர் அய்யனார், ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: