நிலக்கோட்டை பிள்ளையார்நத்தத்தில் மகாமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

 

நிலக்கோட்டை, மே 20: நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான  மகாமுத்து மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 58வது வைகாசி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பித்தளைபட்டி குடகனாற்றிலிருந்து கலசத்துடன் கூடிய பால்குடம் எடுத்து தாரை தப்பட்டை, வானவேடிக்கை முழங்க ஊர்வலமாக வந்து மகா முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியார்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன், கட்சி நிர்வாகிகள் பாலு, அழகர்சாமி, நாச்சியப்பன், பழனிச்சாமி, ஏ.ஆர்.பி.ராஜகாளிபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: