×

ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணி

 

பல்லடம், மே 20: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ளன. இதை முன்னிட்டு ஆதார் அட்டை புதுப்பிப்பு பணிக்காக குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆதார் மையங்களை முற்றுகையிட்டுள்ளனர். பல்லடம் நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆதார் மையம் செயல்படுகிறது. மேலும், தபால் அலுவலகம், தனியார் மையங்களிலும் ஆதார் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆதார் மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால், ஆதார் மையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.

Tags : Palladam ,Tamil Nadu ,Palladam Municipality Office ,Taluk Office… ,
× RELATED பொது இடத்தில் குப்பை கொட்டிய பனியன் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்