சீரான குடிநீர் வினியோகம் கேட்டு பொதுமக்கள் மறியல் முயற்சி

திருப்பூர், மார்ச் 3: திருப்பூர் மாநகராட்சி 11வது வார்டுக்கு உட்பட்ட சாமுண்டிபுரம், ஈ.பி.காலனி, முருங்கதோட்டம், ஏ.பி.நகர், சாமிநாதபுரம், நாகாத்தாள் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இ்ப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் விரயமாகி வந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் நடராஜன் தலைமையில், அப்பகுதியில் நேற்று காைல சாலை மறியல் போராட்டத்தில் ஈடபட முயன்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இளநிலை பொறியாளர் பிரபாகரன், குழாய் ஆய்வாளர் மொசுருதீன் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர். தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: