திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்ட விழா

திருவாரூர், மார்ச் 3: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி நேற்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜ சுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனோ காரணமாக கடந்தாண்டு நடைபெற வேண்டிய தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனோவின் தாக்கம் குறைந்துள்ளதால் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்ட விழாவினை நடத்துவதற்கு அறநிலையதுறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஜனவரி 28ம் தேதி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி காலை 7 மணியவில் தியாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பின்னர் இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயிலின் பரம்பரை உள்துறை கட்டளை சார்பில் தர், வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர் ல சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அறநிலை துறை உதவி ஆணையர் ஹரிஹரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் கவிதா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: