கொடியேற்றத்துடன் துவக்கம் மருத்துவ மாணவியை தரக்குறைவாக பேசிய வாலிபரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மார்ச் 3: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவரை தரக்குறைவாக பேசியவரை கைது செய்ய கோரி மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா பாமணி பகுதியை சேர்ந்தவர் நல்லரசு. இவரது 8 வயது மகன் மாதேஷ் என்ற சிறுவனுக்கு நேற்று முன்தினம் பாம்பு கடித்து விட்டதாக கூறி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்நிலையில் அங்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி பணியிலிருந்த முதுநிலை மருத்துவ மாணவி டாக்டர் கீர்த்தனா என்பவரை சிறுவனின் மாமாவான தாணி கோட்டத்தைச் சேர்ந்த கர்ணன் (38) என்பவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டாக்டர் கீர்த்தனா மருத்துவமனையில் இருந்த புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க உடனடியாக போலீசார் நடந்த சம்பவம் குறித்து கர்ணனிடம் விளக்கம் கேட்டபோது அதற்கு கர்ணன் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்று இரவு 10 மணி அளவில் திடீரென முதுநிலை மருத்துவ மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து டாக்டர் கீர்த்தனாவை தரக்குறைவாக பேசிய கர்ணனை கைது செய்யக்கோரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதுகுறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக தாலுகா போலீசார் தெரிவிக்கவே பின்னர் கீர்த்தனா சார்பில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருந்து வரும் கர்ணனை தேடி வருகின்றனர்.

Related Stories: