×

சரபங்கா நீரேற்றும் திட்டத்தில் முறைகேடுகளை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்


திருத்துறைப்பூண்டி, மார்ச் 3: திருத்துறைப்பூண்டியில் சரபங்கா நீரேற்றம் திட்டத்தில் முறைகேடுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூரிலிருந்து சரபங்கா திட்டம் மூலமாக முறைதவறி முதலமைச்சர் மாவட்டமான சேலத்தில் குழாய்கள் மூலம் நீர் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம்சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்க நகர செயலாளர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பன்னீர்செல்வம் தமிழ் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயி சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் பிரகாஷ், மாவட்டக்குழு உறுப்பினர் பாண்டியன் நகர குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுப்பிரமணியன், வேதரத்தினம், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் காவேரி சரபங்கா  நீரேற்று திட்டத்தை கைவிடகோரி நீடாமங்கலத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டசெயலாளர் கலியபெருமாள் தலமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜமாணிகாம், நகர செயலாலர்ஜோசப், விதொச செயலாளர் அண்ணாதுரை, பூசாதிரம், ஜான்கென்னடி, காளியப்பன், அம்பிகாபதி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Farmers' Union ,Sarabhanga ,
× RELATED விவசாயிகளின் எந்த எதிர்பார்ப்பையும்...