×

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அரசு பள்ளி கட்டிடப்பணி கல்வி அலுவலர் ஆய்வு

முத்துப்பேட்டை, மார்ச் 3: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் பார்வையிட்டார். முன்னதாக முத்துப்பேட்டை அடுத்த பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை கட்டிடம், ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் குடிநீர் வசதி ஆகியவற்றை பார்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், பின்னர் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் நடைபெற்று வரும் கழிப்பறை, சுற்றுச்சுவர், கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம், குடிநீர் வசதி ஆகிய பணிகளை பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது வட்டாரக் கல்வி அலுவலர் முருகபாஸ்கரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்தண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Muthupet ,Union ,
× RELATED குளத்தையே காணோம்! முத்துப்பேட்டை...