சுவர் விளம்பரங்கள் அழிப்பு மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

மன்னார்குடி, மார்ச் 3: முக ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி உறுப்பினர் சேர்க்கை துவக்கப் பட்டுள் ளதாக திமுக அயலக அணி செயலாளரும், எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக அயலக அணி செயலாளரும், எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தாய் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியிலும், நலனிலும் உலக தமிழர்களின் பங்கு எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலினால் திமுக அயலக அணி உருவாக்கப்பட்டது. இந்த அணியின் உறுப்பினர் சேர்க்கை ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதியன்று துவங்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவுப் பாலமாகத் திகழும் இந்த அணியில் தங்களை இணைத்துக் கொண்டு அயலக தமிழர்களின் நலனுக்கும், தாய் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்க விரும்பும் அயலகத் தமிழர்கள் www.dmknriwing.com அல்லது https://join.dmknriwing.com என்ற வலைதளத்தில் சென்று உறுப்பினராகப் பதியலாம். பதிவு செய்யும் உறுப்பினர்களை நாடு வாரியாகப் பிரித்து ஒருங்கிணைப்பதோடு, எதிர் வரும் நாட்களில் அவர்களோடு இணைந்து, திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலில் திமுக அயலக அணி உலகத் தமிழர்களின் நலனுக்காகவும், தாய் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பயணிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு திமுக அயலக அணி செயலாளரும், எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

Related Stories: