விஏஓ, வருவாய் ஆய்வாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனை

திருத்துறைப்பூண்டி, மார்ச் 3: திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீசன் தலைமையில் சரக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் விஏஓக்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகத்தில் உள்ள சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் விளம்பர போர்டுகள் பிளக்ஸ் மற்றும் கொடிகள் அனைத்தும் உடனே நீக்கப்பட வேண்டும். ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் பாலங்கள் சாலையோரங்கள், அரசு பேருந்துகள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டிடங்கள் ஆகியவற்றில் உள்ள போஸ்டர்கள் பேனர்கள் கொடிக்கம்பங்கள் உடனே அகற்ற வேண்டும். அனுமதி வழங்கப்படாத தனியார் இடங்களில் உள்ள அரசியல் விளம்பரங்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் நீக்கம் செய்ய வேண்டும்.

வாக்குச் சாவடி பகுதியில் இருந்து 100 மீட்டர் 200 மீட்டர் அடையாளம் வரைதல் வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் பகுதிக்குள் அரசியல் கட்சிகளால் எவ்வித வாக்கு சேகரிக்கும் தனியார் வாகனங்கள் போக்குவரத்து தடை செய்ய வேண்டும்.

200 மீட்டர் வாக்குச் சாவடியில் இருந்து அப்பால் அரசியல் கட்சி அலுவலகம் பந்தல் அமைக்க வேண்டும். கிராம அளவிலான கண்காணிப்பு குழு அமைத்தல் வேண்டும் இப்படி அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். இப்பணியில் இடையூறு நேர்ந்தால் பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனே சுவர் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: