புதிய மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு பயிற்சி

மன்னார்குடி, மார்ச் 3: மின்வாரியத்தில் புதிதாய் பணிக்கு சேர்ந்த கேங்மேன் பணியாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி முகாம் மன்னார்குடியில் நடந்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மன்னார்குடி நகர உபக் கோட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த பயிற்சி கேங்மேன் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி முகாம் நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. முகாமில், எர்த் இராடு, கையுறை, இடுப்புக்கயிறு போன்ற பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தியும், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தும் மின் விபத்து இல்லாமல் பணியாற்றுவது குறித்தும் விளக்கப்பட்டு, பொது மக்களுக்கு மின் விபத்து நேரா வண்ணம் பணியாற்றும் முறைகுறித்தும் புதிதாய் பணிக்கு சேர்ந்த கேங்மேன் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் புதிய பணியாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முகாமில், புறநகர் உதவிப் செயற் பொறியாளர் செங்குட்டுவன், பிரிவுப் பொறியாளர்கள் ரகுபதி, கண்ணன், ராஜகோபாலன், குமார், பால சுப்ரமணியம் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: