- செங்கல்பட்டு
- செங்கல்பட்டு மாவட்டம்
- கலெக்டர்
- மாலதி ஹெலன்
- செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம்
செங்கல்பட்டு, மே 20: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் (வரும் 22ம் தேதி) சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 5000 பணி காலியிடங்களை தேவைக்குரிய நபர்களை, நேர்முகத்தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளனர்.வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம்.
8, 10 மற்றும் 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ, ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வித்தகுதி உடையவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 9499055895 /8248185171 / 9486870577 / 8122140214 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
