ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

பந்தலூர், மார்ச் 3:  பந்தலூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.  பந்தலூர் அருகே நெலாக்கோட்டை விலங்கூர் பகுதியில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக நெலாக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ. முரளிதரன் நெலாக்கோட்டை பஜார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது சந்தேகப்படும்படி வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை செய்த போது 22 சாக்கு பைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், கூடலூர் புத்தூர்வயல் பகுதியை சேர்ந்த ஷாஜகான் (29) என்பவர் கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 1,100 கிலோ ரேஷன் அரிசி, ஜீப்பை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு கலப்பட தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

>