×

தஞ்சை புதுப்பட்டினத்தில் உணவகத்தில் ஏசி வெடித்து உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை: தஞ்சை புதுப்பட்டினத்தில் உணவகத்தில் ஏசி வெடித்து உயிரிழந்த ரவிராஜ்(27) என்பவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்த 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம், காயமடைந்த நபருக்கு ரூ.50,000 வழங்கவும் முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், புதுப்பட்டினம் கிராமம், சாந்தபிள்ளை கேட் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் 18.05.2026 அன்று மாலை 4.20 மணியளவில், அந்நிறுவனத்தின் குளிரூட்டி (Air Conditioner) பழுது பார்க்கும் பணியின் போது கம்ப்ரசர் (Compressor) வெடித்து ரவி ராஜ், (வயது 27), த/பெ.ஜோதி பொன்னாவரை என்பவர் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் கதிரேசன் (வயது 42), த/பெ.கலியபெருமாள், பிரேம்குமார் (வயது 26), த/பெ.துரைசாமி. கணேசன் (வயது 40), த/பெ.விஜயன், அருண்குமார் (வயது 27), த/பெ.சவேரியார் ஆகிய நான்கு நபர்களுக்கும் மற்றும் இலேசான காயமடைந்து சிகிக்சை பெற்று வரும் அஜித்குமார் (வயது 27). த/பெ.லெட்சுமணன் ஆகியோருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் இவ்விபத்தில்
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Vijay ,Tanjai Pudupatnam ,Chennai ,Raviraj ,
× RELATED புதுகை அருகே மாற்றுத்திறனாளி பெண்...