தில்லைவிடங்கன் கிராமத்தில் பொது குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

கொள்ளிடம், மார்ச் 3: கொள்ளிடம் அருகே தில்லைவிடங்கன் கிராமத்தில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் பொது குளம் உள்ளது. இந்த குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் எளிதில் சென்று சேர்வதற்கும், எளிதில் வெளியேறுவதற்கும் வசதியாக இருந்தது. இந்த குளம் கிராம மக்கள் சார்பில் அடிக்கடி தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. குளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை கிராம மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குளம் தூர்வாரப்படாமலும், போதிய பராமரிப்பு இல்லாமலும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து யாருக்கும் பயனின்றி உள்ளது. எனவே இந்த குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுவதுடன் விரைந்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: