புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி உட்கோட்டம், மழையூர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 35 வயது திருமணமாகாத பெண் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் 18.05.26-ம் தேதி தனது வீட்டிற்கு செல்வதற்கு பாச்சிக்கோட்டை மேகலா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது, அங்கு வந்த எதிரிகளான மாரிமுத்து(55) த.பெ சன்னாசி, மணக்கொல்லை, பொன்னன்விடுதி, கறம்பக்குடி மற்றும் சேகர்(55) ஆகிய இருவரும் வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி TN 69 BD 2460 என்ற பதிவெண் கொண்ட காரில் கடத்தி சென்று மேற்கண்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, மணகொல்லை கிராமத்தில் உள்ள பிள்ளையார் குளம் அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்த நிலையில், உடனடியாக விசாரணை மேற்கொண்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 01/26 u/s 87, 74, 126(2), 75(1) & 70 BNS r/w 92(b) Rights of Persons with Disabilities Act. (Old sec. 366, 354, 341, 354A & 376D IPC r/w 92(b) Rights of Persons with Disabilities Act) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் சம்மந்தபட்ட மாரிமுத்து என்பவரை 24 மணிநேரத்திற்குள் விரைவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மற்றொரு எதிரியை கைது செய்ய பிருந்தா, காவல் துணைகண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
