×

டிராக்டரில் திறந்த நிலையில் மணல், கட்டுமானபொருட்கள் ஏற்றி செல்வதால் வாகனஓட்டிகள் அவதி

கரூர், மார்ச். 3: கரூர் நகரப்பகுதிகளில் டிராக்டர் போன்ற வாகனங்களில் திறந்த நிலையில் மணல் மற்றும் கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்வதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகினற்னர். கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடித்த கட்டிட மண்களும், செங்கற்கள் போன்றவை நகரப்பகுதியின் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.அவ்வாறு ஏற்றிச் செல்லப்படும் வாகனங்கள் தார்ப்பாய் போட்டு மூடாமல் திறந்த நிலையில் செல்வதால், காற்றின் காரணமாக மண் துகள்கள் பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நகராட்சி பகுதியில் தினமும் நடைபெற்று வருகிறது. இது குறித்து புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப் படுவதில்லை. எனவே, துறை அதிகாரிகள் இதுபோல திறந்த நிலையில் வரும் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் குறித்து கண்காணித்து அறிவுறுத்த வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...