கரூர் பைபாஸ் மேம்பாலத்தையொட்டி சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர், மார்ச். 3: கரூர் மதுரை பைபாஸ் சாலையின் மேம்பாலத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பைகள் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே மதுரை சேலம் பைபாஸ் சாலை செல்கிறது. இந்த பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கரூரில் இருந்து மதுரை, திண்டுக்கல் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ்ப்புறம் சர்வீஸ் சாலையின் வழியாக சென்று பைபாஸ் சாலையை அடைந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், சர்வீஸ் சாலையோரம் கடந்த சில மாதங்களாக அதிகளவு குப்பை கொட்டப்பட்டு அள்ளப்படாமல் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, துர்நாற்றம் வீசும் அளவுக்கு தேங்கியுள்ள இந்த குப்பைகளை இந்த பகுதியில் இருந்து அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>