அகற்ற கோரிக்கை சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த 65 இடங்கள் தேர்வு

கரூர், மார்ச்.3: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்திக் கொள்ள மாவட்டம் முழுதும் 65 இடங்கள் காவல்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கரூர் சட்டமன்ற தொகுதியில், நெரூர் சீரணி அரங்கம், வெண்ணைமலை பேரூந்து நிறுத்தம், வாங்கப்பாளையம் அரசு காலனி குறுக்குச்சாலை, ராயனூர் பஸ் நிறுத்தம், லைட்ஹவுஸ் கார்னர், கரூர் தாசில்தார் அலுவலகம் அருகே, 80 அடி ரோடு, உழவர் சந்தை, தலைமை அஞ்சல் நிலையம், தாந்தோணிமலை கடைவீதி, வெங்கமேடு 50 அடி ரோடு, மண்மங்கலம் பேரூந்து நிறுத்தம், வாங்கல் கடைவீது ஆகிய 13 இடங்களில் கூட்டங்கள் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், நொய்யல் பேரூந்து நிலையம், வேலாயுதம்பாளையம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே, புகளூர் நான்கு ரோடு, தோட்டக்குறிச்சி கடைத்தெரு, தளவாபாளையம் கடைத்தெரு, புன்னம்சத்திரம், மணல்மேடு கடைத்தெரு, அரவக்குறிச்சி மாரியம்மன் கோயில் திடல், பள்ளப்பட்டி ஷா நகர், அண்ணாநகர், பழனி சாலையில் உள்ள புங்கம்பாடி கார்னர், ஈசநத்தம் பஜார், ஆண்டிப்பட்டிக் கோட்டை பஜார், மலைக்கோவிலூர் மில்கேட் அருகே, புத்தாம்பூர் முதல் ஆறு சாலை சந்திப்பு, சீத்தப்பட்டி காலனி மாரியம்மன் கோயில் திடல், சின்னதாராபுரம் பேரூந்து நிறுத்தம் எதிரே, க,பரமத்தி பஜார், வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா ஆகிய 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில், சணப்பிரட்டி கடைவீதி, மணவாடி கல்லுமடை காலணி, எரிமேடு பாகநத்தம், கேபி தாளப்பட்டி, மகாதானபுரம் கடைவீதி, சேங்கல் கடைவீதி, சிந்தலவாடி கடைவீதி, பழைய ஜெயங்கொண்டம், காணியாளம்பட்டி விநாயகர் கோயில் அருகே, பி.உடையார்பட்டி, கடவூர் கடைவீதி, புலியூர் கடைத்தெரு, உப்பிடமங்கலம் இந்திகாந்தி சிலை அருகே, வெள்ளியணை பஜார், மாயனு£ர் ஊராட்சி மன்றம் அருகே, சித்தலவாடி பள்ளி திட்ல், கொசூர், தரகம்பட்டி பேரூந்து நிலையம், பாலவிடுதி மாரியம்மன் கோயில் அருகே என 19 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குளித்தலை சட்டமன்ற தொகுதியில், கொசூர் பஸ் நிறுத்தம், காவல்காரன்பட்டி பேரூந்து நிறுத்தம், ஆர்டிமலை பேரூந்து நிறுத்தம், குளித்தலை சுங்ககேட் பேரூந்து நிறுத்தம், அய்யர்மலை பேரூந்து நிறுத்தம், நங்கவரம் சாத்தாயி அம்மன் கோயில் அருகே, பெரியபாளையம், நங்கவரத்தில் உள்ள நச்சலு£ர் பேரூந்து நிறுத்தம், வைகைநல்லு£ர் வடக்கு பேரூந்து நிறுத்தம் அருகில், கள்ளப்பள்ளி கொடிக்காய் தெரு, பஞ்சப்பட்டி பேரூந்து நிறுத்தம், தோகைமலை பேரூந்து நிறுத்தம் ஆகிய 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>