×

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் ராஷ்ட்ய பால் புரஸ்கார் விருது பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 

திருவாரூர், மே 19: திருவாரூர் மாவட்டத்தில் ராஷ்ட்ய பால் புரஸ்கார் விருது பெறுவதற்கு தகுதியுடைய குழந்தைகள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக பிரதான் மந்திரி ராஷ்ட்ய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது, தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளின் திறமைகளை பாராட்டி அங்கீகாரம் அளிப்பதனை நோக்கமாக கொண்டு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் விளையாட்டு, சமூகசேவை, அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றது. இந்த விருதினை பெறுவதற்கு இந்திய குடிமகன் மற்றும் 5 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தினை < https://awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Collector ,Mohanachandran ,Ministry of Women and Child Development ,Government of India… ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்