திருவாரூர், மே 19: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நிலம் தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் வரும் 30ந் தேதிக்குள் பதிவு செய்துகொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாயிகள் தங்களது நிலங்களைஆன்லைனில் பதிவு செய்யும் பணி 555 வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் தரவு தளத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்கள், ஆதார் எண் மற்றும் ஆதார் இணைந்த கைபேசியுடன் தங்கள் நில விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
