திருவையாறு அருகே மதுர காளியம்மன் கோயில் திருவிழா

 

திருவையாறு, மே 19: திருவையாறு அருகே மனுநீதிப்பேட்டை மதுர காளியம்மன், சமயபுரத்தாள்,  மதுரை வீரன் கோயில் 32ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தேர்த் திருவிழா நடைபெற்றது.
திருவையாறு மனுநீதிப்பேட்டை மதுரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 11 ம் தேதி திருவையாறு காவிரிப்பாலம் தென்கரையிலிருந்து சக்தி கரகம், மகேஸ்வரி குழுவினர்கள் முன்னிலையில் புறப்பட்டு வீதி உலா சென்று கோயிலை வந்தடைந்தது. 12ம் தேதி காலை கோயிலில் இருந்து மதுர காளியம்மன் காளியாட்டத்துடன் புறப்பட்டு
சின்னக்கண்டியூர், கல்யாணபுரம் வழியாக கோயில் வளாகம் வந்தடைந்தது.

Related Stories: