அரியலூர், மே 19: அரியலூர் மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளர்கள் 22 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் பேரில், அரியலூர் மாவட்டத்தில் உதவி அய்வாளர்கள் 22 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்பி அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக தமிழரசு, போதைப் பொருள் சிறப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளராக ராஜவேல் ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
