- பொது குறை மறுசீரமைப்பு நாள்
- அரியலூர் ஆட்சியர் அலுவலகம்
- அரியலூர்
- அரியலூர் மாவட்ட ஊராட்சி
- மாவட்ட கலெக்டர்
- ரத்தின சாமி
அரியலூர், மே 19: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 299 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்
டனர்.
