×

வாகன ஓட்டிகள் அவதி கரூர் மில்கேட் வஉசி தெருவில் திறந்த நிலையிலான கழிவுநீர் வடிகால் மூடப்படுமா?

கரூர், மார்ச். 3: கரூர் மில்கேட் வஉசி தெருவில் திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகாலை பாதுகாப்பாக மூட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மற்றும் வாகனஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை மில்கேட் அருகே வஉசி தெரு வழியாக வடக்குத்தெரு மற்றும் ராயனூர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலையோரம் வர்த்தக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த தெருவில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வர்த்தக நிறுவனங்களை ஒட்டி திறந்த நிலையில் சாக்கடை வடிகால் உள்ளது. இதனால், பகல் நேரங்களில் கூட வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் இதனை கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், இரவு நேரத்தில் மிகுந்த ஆபத்தான சூழலில் இந்த பகுதியின் நிலை உள்ளது. இந்த பகுதியின் பின்புறம் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இதன் காரணமாக இந்த சாலையோரம் இரவு நேரங்களில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகாலால் ஆபத்தான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, மக்கள் நலன் கருதி திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் வடிகாலை சிலாப் கொண்டு மூட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags : Avadi Karur ,Millgate Vausi Street ,
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது