×

வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் பயன்படுத்த 19 லட்சம் கிளவுஸ் ஆர்டர்

ஈரோடு, மார்ச் 3: ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளின் போது வாக்காளர்கள் பயன்படுத்த 19 லட்சம் கிளவுஸ் ஆர்டர் கொடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடக்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாக பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக 526 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குபதிவு நாளின் போது, வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும். வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கு முன்பாக சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைகளை சுத்தம் செய்த பிறகு வாக்களிக்க கைக்கு கிளவுஸ் வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கு சேர்த்து 19 லட்சம் கிளவுஸ் ஆர்டர் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியினை தமிழக சுகாதாரத்துறை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளளர். ஈரோடு மாவட்டத்தில் 19 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சம் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகலாம் என்பதாலும், தபால் ஓட்டுகளை கருத்தில் கொண்டு 19 லட்சம் மாஸ்க்குகள் தேவைப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் கருதுகின்றனர். கிளவுஸ் அணிந்து உள்ளே செல்லும் வாக்காளர்கள் வாக்களித்த பிறகு வெளியே வந்ததும், வாக்குசாவடி மையத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் கிளவுஸ்களை கழற்றி போட்டுவிட வேண்டும்.
கிளவுஸ் பெட்டிகளை அவ்வப்போது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறையினர் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Klaus ,
× RELATED 2021-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு