ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி தேவர்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் தேவராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  

மேலும் தவன புஷ்பத்தால் அர்ச்சித்து, ஆபரண அணிகலன்கள், மலர் மாலைகள் அணிவித்து, சிறப்பு கோடாலி கொண்டை சிறப்பு அலங்காரத்தில் ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, மற்றும் பெருந்தேவி தாயாருடன்,  கோயில் வளாகத்தில் உள்ள நந்தவன மண்டபத்துக்கு ஊர்வலமாக வந்து எழுந்தருளினார். கோயில் பிரகாரத்தில் வலம் வந்த தேவராஜ சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வணங்கி சென்றனர்.

Related Stories:

>