×

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினம்: நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

நெல்லை, மே 19: சிங்கள ராணுவ வெறி தாக்குதலால் உயிரிழந்த தமிழின மக்களுக்கும் போராளிகளுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நடந்த 17வது ஆண்டு வீரவணக்கம் நிகழ்ச்சியையொட்டி பாளை தியாகராஜநகரில் மாவட்டத் தலைவர் கண்மணிமாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்ற தமிழ் உணர்வாளர்கள், மே 18 நினைவுநாள் படத்தில் இடம்பெற்ற போராளிகள் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தமமுக நிர்வாகிகள் முருகன், பரமசிவம், நெல்லை மணிகண்டன், ஆட்சி தமிழ் புரட்சி கொற்றம் பொதுச்செயலாளர் சேரன்துரை, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பேராச்சி, ஆனந்தி, அன்புமுத்தமிழ், கண்மணிலலிதா, பொன் முருகன், இசக்கி பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து வீரன், ஜெய்லானி, பைரோஸ்கான், திருக்குமரன், சங்கரன், இசக்கிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளையொட்டி நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாளை லூர்துநாதன் சிலை முன்பாக இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் தலைமை வகித்தார். இதில், இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிகழ்வில் மதிமுக வக்கீல் சுதர்சன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன், புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளர் நெல்சன்,

மார்க்சிஸ்ட் பேரின்பராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைத்செயலாளர் முத்துகிருஷ்ணன், பூலித்தேவர் மக்கள் இயக்க மகளிரணியைச் சேர்ந்த இசக்கியம்மாள், குயிலி நாச்சியார், மூவேந்தர் முன்னணி கழக மாவட்டச் செயலாளர் மணிப்பாண்டியன், சீர்மரபினர் உரிமை மீட்பு இயக்கத்தின் சீனிப்பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

 

Tags : Mullivaikkal Genocide Day ,Nellai ,program ,Tamil Nadu People's Progress Party ,Palai Thiagarajanagar ,Kanmanimaveeran ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்