×

தனியார் பொறியியல் கல்லூரியில் இயக்கப்படாத பேருந்துக்கு கட்டணம் செலுத்த நெருக்கடி: மாணவர்கள் திடீர் சாலை மறியல்

திருப்போரூர்: இயக்கப்படாத பேருந்துக்கு கட்டணம் வசூலிக்கும் கல்லூரி நிர்வாகத்ைத கண்டித்து, மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கேளம்பாக்கம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதியான தாழம்பூரில் அக்னி பொறியியல் கல்லூரி உள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் பொங்கல் விடுமுறை முடிந்து  கடந்த ஜனவரி 18ம் ேதி  கல்லூரி திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால், கல்லூரி பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் அரசு பேருந்தில் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இந்தவேளையில், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய பேருந்து கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த இறுதியாண்டு மாணவர்களை, குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக ₹8 ஆயிரம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க முடியாது என நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. கல்லூரியில் தற்போது இன்டர்னல் தேர்வு நடைபெறுவதால், மாணவர்களின் வருகைப்பதிவு மற்றும் இன்டர்னல் மதிப்பெண் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களை கல்வி நிர்வாகம்  வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், மாலை 5 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, எவ்வித முடிவும் ஏற்படவில்லை. இதனால, ஆத்திரமடைந்த மாணவர்கள், தாழம்பூர் - பொன்மார் சாலையில் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர், கல்லூரி நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிட இயலாது  என கூறி ஊழியர்கள் கலைந்து சென்றனர். ஆனால் மாணவர்கள், இயக்கப்படாத பேருந்துக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...