மாமல்லபுரத்தில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு

மாமல்லபுரம்: வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து மாமல்லபுரம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக, மாமல்லபுரம் இசிஆர் பஸ் நிறுத்தம், பூஞ்சேரி பஸ் நிறுத்தம், அரசு ஆதிதிராவிடர் பள்ளி, பூஞ்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சுவர்களில் ஓட்டப்பட்டு இருந்த போஸ்டர், சுவர் விளம்பரங்களை முழுமையாக அழிக்கும் பணி மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது.

மேலும், ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களும் அகற்றப்பட்டன. மாமல்லபுரம் பேரூராட்சி (பொ) செயல் அலுவலர் கணேசன், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் நேரில் சென்று சுவர் விளம்பரம் அழிக்கும் பணியை பார்வையிட்டனர்.

Related Stories:

>