×

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

 

நத்தம், மே 19: நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நத்தம் எஸ்ஐ கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செந்துறை பழைய மதுபான கடை முன்பு திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டுவை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Natham ,SI Karthikeyan ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்