கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்தது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சமூக பாதுகாப்பு உதவி ஆட்சியர் பாலகுரு தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ் வரவேற்றார். கும்மிடிப்பூண்டி தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணன், ஊத்துக்கோட்டை தேர்தல் துணை வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுரு பேசுகையில், கும்மிடிப்பூண்டியில் உள்ள 405 வாக்குச்சாவடிகளிலும் அமைதியாக தேர்தலை நடத்த அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள 26 மண்டல தேர்தல் அலுவலர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். தேர்தல் நேரம் என்பதால், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பட்டா மாறுதல், நில ஆக்கிரமிப்பு, சாலை சீரமைத்தல் உள்பட பல்வேறு கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை வட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் உள்ள பெட்டியில் போடலாம் என்றார்.

Related Stories:

>