க்ரைம் செய்திகள் கட்சி கொடி, போஸ்டர்கள் அகற்றம் ரங்கம் தொகுதியிலும் வெற்றி பெற்று மக்கள் பலத்துடன் திமுக ஆட்சி அமைக்கும்

திருச்சி, மார்ச் 2: ரங்கம் தொகுதியிலும் திமுக வெற்றி பெற்று மக்கள் பலத்துடன் திமுக ஆட்சி அமைக்கும் என்று முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறினார். திமுக 11வது மாநில மாநாட்டை திருச்சி சிறுகனூரில் சுமார் ஏழரை ஏக்கரில் பிரமாண்டமாக நடத்த திமுக சார்பில் திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. கடந்த மாதம் திருச்சி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாநாடு ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கடந்த 26ம் தேதி தமிழகம் உள்பட 5 மாநில சட்ட பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் திமுக மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக வடக்கு மற்றும் ெதற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாற்று ஒரு தேதி அறிவிக்கப்படும் என்றும், மாநாடு போல் இல்லாமல் கூட்டம் நடத்துவதற்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஏற்பாடு செய்யப்படும் என முதன்மை செயலாளர் கே.என்.நேரு அறிவித்தார். இந்நிலையில் கே.என்.நேரு தினகரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி: வரும் 7ம் தேதி, சிறுகனூரில் மாநாடு நடைபெற இருந்த இடத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசுகிறார். இதில் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். மேலும் தமிழக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் மட்டும் கலந்துகொள்கின்றனர்.

தொகுதி பங்கீடு தலைவர் தலைமையில் நடந்தது. வரும் 10ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு முடிந்துவிடும். திருச்சி மேற்கு தொகுதியில் நான் போட்டியிட மனு அளித்துள்ளேன். போட்டியிட தலைவர் அனுமதி கொடுப்பார். ரங்கம் தொகுதியிலும் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். திருச்சி காவிரி பாலம் கடந்த 10 ஆண்டுகளில் 4 முறை சாலை செப்பனிடப்பட்டும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மக்களின் வரிப்பணம் பல கோடி வீணாகிவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக பணப்பலத்துடன் அதிமுக ஆட்சியில் உள்ளது. பணப்பலத்தை எதிர்த்து மக்கள் பலத்துடன் திமுக வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். அதில் மக்கள் தெளிவாக உள்ளனர். மக்கள் பலத்தில் திமுக உள்ளது.

Related Stories: