திருச்சி, மார்ச் 2: தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை கடந்த 26ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து மார்ச் 12ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. கடைசி நாள் 19ம் தேதி வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி. வேட்புமனு திரும்ப பெற கடைசி தேதி 22ம் தேதியாகும். தேர்தல் தேதி அறிவித்ததை அடுத்து அரசியல் கட்சியினர் கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீட்டில் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் அனைத்து கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.