×

இவ்வாறு அவர் கூறினார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டி தேர்தல் பாதுகாப்பு பணி 96 மத்திய ஆயுதப்படை வீரர்கள் திருச்சி வருகை

திருச்சி, மார்ச் 2: தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை கடந்த 26ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து மார்ச் 12ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. கடைசி நாள் 19ம் தேதி வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி. வேட்புமனு திரும்ப பெற கடைசி தேதி 22ம் தேதியாகும். தேர்தல் தேதி அறிவித்ததை அடுத்து அரசியல் கட்சியினர் கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீட்டில் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் அனைத்து கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதில் திருச்சியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 96 வீரர்கள் நேற்று அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து திருச்சி வந்தனர். இங்கு திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் தங்கி உள்ளனர். தொடர்ந்து இன்று அல்லது நாளை பொதுமக்களின் அச்சம் போக்கும் விதமாக பாதுகாப்பு அணிவகுப்பு நடத்த உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : K. My. Nehru ,Federal Armed Forces ,Tiruchi ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சியில் குறுகிய...