தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறை ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது கோரிக்கை மனு போட பெட்டி வைப்பு மறைக்கப்படாத கல்வெட்டு அம்பேத்கர், பெரியார் சிலையை மறைக்க எதிர்ப்பு

திருச்சி, மார்ச் 2: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் மனுக்களை போட கலெக்டர் அலுவலகங்களில் மனு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் நேற்று மக்கள் மனுக்களை ேபாட்டு சென்றனர். இதில் மக்கள் உரிமை கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம் மற்றும் தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரமணா ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் அந்த அமைப்புகள் சார்பில் தனித்தனியாக மனு போட்டனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ேதர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து அரசியல் தலைவர்கள் சிலைகள் துணியால் மறைக்கப்பட்டு வருகிறது. இதில் அம்பேத்கர், பெரியார் ஜாதி தலைவர்களோ, அரசியல் தலைவர்களோ இல்லை. எனவே அவர்களது சிலைகளை மறைக்க கூடாது. இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Related Stories:

>