×

கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான வாலிபர் கஞ்சா விற்றபோது சிக்கினார் 3.50 கிலோ பறிமுதல்


திருச்சி, மார்ச் 2: திருச்சி அரசு மருத்துவமனை எஸ்ஐ தலைமையிலான போலீசார் கல்லாங்குளம் குழுமிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்தனர். அவரிடம் மூன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரிந்து, அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சமயபுரம் வெங்ககுடியை சேர்ந்த பிரவீன்குமார்(25) என்பதும், டாஸ்மாக் பாரில் சப்ளையர் ரமேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர்  மற்றும் 2019ல் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீன் பெற்று தலைமறைவானவர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சியில் இன்று மின்தடை