நாகர்கோவில் மாநகர பகுதியில் 1170 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாகர்கோவில், மார்ச் 2:  நாகர்கோவில் மாநகர பகுதியில் இதுவரை மொத்தம் 1170 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் தினமும் 600 பேருக்கு சளிமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி  தொடங்கப்பட்டது. நாகர்கோவில் மாநகர பகுதியில் தூய்மை பணியாளர்கள், மற்றும் முன்கள பணியாளர்கள், தனியார் மருத்துவமனை முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முதற்கட்டமாக முதல் டோஸ் 1030 பேருக்கு போடப்பட்டது.  இரண்டாவது டோஸ் மாநகர பகுதியில் போடப்பட்டு வருகிறது. இதுவரை 140 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 1170 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், குமரி மாவட்டத்திற்கு வரும் பொதுமக்கள் மாவட்டத்தின் எல்லைபகுதியில் தீவிர சோதனைக்கு  பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மாநகராட்சி மாநகர் நல அதிகாரி டாக்டர் கின்சால் கூறியதாவது: நாகர்கோவில் மாநகர பகுதியில் இதுவரை கொரோனா தொற்றால் 4218 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சைப்பெற்று வருகின்றார்.  

கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று பரவி வருவதால், அந்த மாநிலங்களில் இருந்து நாகர்கோவில் மாநகர பகுதிக்கு வருபவர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தற்போது திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒருவர் அவரது உறவினர்கள் என மொத்தம் 5 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர மாநகர பகுதியில் 5 மையங்களில் தினமும் 600 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்ைல. இருப்பினும் மாநகர பகுதியில் ஆணையர் ஆஷாஅஜித் உத்தரவின்பேரில் சளி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: