மண்டைக்காடு கோயில் விழா குமரிக்கு 9ம்தேதி உள்ளூர் விடுமுறை

நாகர்கோவில், மார்ச் 2 : குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : குமரி  மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில்  மாசிக்கொடை விழாவை முன்னிட்டு வருகிற 9.3.2021 அன்று, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. அதற்கு பதிலாக 10.4.2021 (சனி) அன்று மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். உள்ளூர் விடுமுறை அன்று மாவட்ட தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories:

>