திருவில்லிபுத்தூரில் 73 மையங்களில் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது

திருவில்லிபுத்தூர், மார்ச் 2: திருவில்லிபுத்தூரில் 73 மையங்களில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லோதோருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதோருக்காக, மாநில அரசின் 100 சதவீத நிதி பங்களிப்புடன் சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் 2019-2020ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 73 மையங்களில் தலா 40 பேர் கற்று வருகின்றனர்.

இவர்களுக்கு தினமும் இரவு மையத்தின் கல்வி தன்னார்வலர் கற்றுத் தருகிறார்.இவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மையத்தில் தலைமை ஆசிரியை மற்றும் தேர்வுகூட கண்காணிப்பாளர் மேரி மற்றும் கல்வி தன்னார்வலர் வனிதா இத் தேர்வினை நடத்தினர். மையத்தில் கற்ற 40 முதியவர்களும் தேர்வினை ஆர்வத்துடன் எழுதினர். திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தண்டாயுதபாணி, பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சீனிவாசன், விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Stories:

>