சாலை பள்ளங்களில் கொட்டப்படும் சாக்கடை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

ராஜபாளையம், மார்ச் 2: ராஜபாளையத்தில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் சாக்கடை கழிவுகளைக் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்தெரிவித்துள்ளனர். ராஜபாளையத்தில் கடந்த சில ஆண்டுகளாக திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பெரிய அளவிலான குழாய்கள் பதிக்கும் பணியின்போது சாலைகளில் இருந்து அள்ளப்படும் மண்களை தனியாருக்கு பெருமளவு விற்பனை செய்து விட்டனர். ஆனால் முழு அளவு பணிகள் நடைபெறாத நிலையில் சாலைகளில் தற்போது ஏற்படும் பள்ளங்களில் ஆங்காங்கே வாறுகாலில் அள்ளப்படும் கழிவுகளை சாலைகளில் கொட்டி வருகின்றனர். இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதிலிருந்து வரும் துர்நாற்றம் தொற்றுநோய் பரவும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சாலைகளில் அதிக அளவு மணல், தூசி பறப்பதால் பலருக்கும் ஆஸ்த்மா உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவும் நிலையில், ராஜபாளையத்தில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. எனவே, சாக்கடை கழிவுகளை சாலைப்பள்ளத்திற்கு கொட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: