ராஜபாளையம் கல்லூரியில் மனநல ஆலோசனை மையம் துவக்கம்

ராஜபாளையம், மார்ச் 2: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தாலீம் என்ற பெயரில் மனநல ஆலோசனை மையம் ராம்கோ குழுமத்தின் இயக்குனர் நிர்மலா ராஜூ, அன்னா சாண்டி குழும நிறுவனர் அன்னா சாண்டி ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் ஜெகநாத் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆட்சி மன்றக்குழு செயலர் .விஜயராகவன் தலைமை வகித்தார். ஆட்சிமன்ற குழுத்தலைவர் திருப்பதிராஜா வாழ்த்துரை வழங்கினார்.ராம்கோ குழுமத்தின் இயக்குனர் நிர்மலா ராஜூ பேசுகையில், பெண்கள் தங்களது தலைமை பண்பை வளர்த்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் எதைப் பற்றியும் நன்றாக சிந்தித்து முடிவெடுக்கும் திறமையை வளர்த்து கொள்ளத் தேவையான வழிமுறைகள் குறித்தும் எடுத்துக்கூறினார்.

அன்னா சாண்டி குழுமத்தின் நிறுவனர் அன்னா சாண்டி பேசுகையில், பெண்களுக்கு உடல்நலனும் மனநலனும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மனநலம் சரியாக இருந்தால் தான் கல்வி, வேலையில் நாட்டம் ஏற்படும் என்றார்.வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மற்றும் மகளிர் முன்னேற்றக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெய் நன்றி கூறினார்.

Related Stories:

>